Friday, September 13, 2024

பழையபாதையா ? புதியபாதையா? யாழ்பாணத்தில் தமிழ் மக்களின் மனச்சாட்சியை பலமாக தட்டிய அனுர

மேடையில் அமர்ந்திருக்கும் தோழர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது கட்சியை கட்டியெழுப்புவதற்காகக் கடுமையாக உழைக்கும் சகோதர சகோதரிகள் அனைவரிடமும் அனுமதியைக் கோருகின்றேன்… இன்று இந்த யாழ் மாவட்டத்திற்கான தலைமைத்துவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக மிகவும் வலுவானதொரு இளைஞர் அணி தேசிய மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளதுள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அதேபோல, எங்களுக்குச் செவிமடுக்கவும், எங்களுடன் உரையாடவும் இந்த இடத்தில் கூடியிருக்கிற உங்களனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, அனுமதியையும் கோருகின்றேன்…

இந்தச் செப்டெம்பர் 21 ஆம் திகதி தேர்தலொன்று நடைபெறவுள்ளதென்பதை நாமனைவரும் அறிவோம்… பிரசார நடவடிக்கைகளுக்காக எஞ்சியிருப்பது

Read more...

Thursday, August 29, 2024

'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' நந்தன வீரரத்ன

இலங்கை இனப்பிரச்சினை கொழுந்து விட்டெரிவதற்கு காரணமாகிப் போன யாழ் நூலக மற்றும் நகர எரிப்பு தொடர்பில் மூத்த ஊடகவியலாளரான நந்தன வீரரட்ண என்பவர் 'யாழ்ப்பாணத்தை தீயிடுதல்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

1981ம் ஆண்டு யாழ் நூலகம் மற்றும் நகரம் ஏரியூட்டப்பட்டமை, ஜே: ஆர் ஜெயவர்த்தவினால் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது ? திட்டத்தை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த நபர்கள் யார்? அந்நபர்களின் பங்களிப்பு, செயற்பாடுகள் எவ்வாறமைந்திருந்தது? அதன் விளைவுகள் எவ்வாறன தாக்கத்தை ஏற்படுத்தின என்பன

Read more...

Monday, March 25, 2024

சிறுபாண்மையினனுக்கு இந்நாட்டின் பிரதமராக , ஜனாதிபதியாக வரமுடியாது என்ற உணர்வு வருகின்றதென்றால் பிரச்சினை இருக்கிறதாம். கனடாவில் அனுர

நேற்று முன்தினம் 23.02.2024 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடா வாழ் இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நாடாத்தியிருந்தார். கனடா வரலாற்றில் மிகப்பெரும் திரளான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒன்றாக கலந்து கொண்டிருந்த அச்சந்திப்பில் பேசிய அவர் இலங்கையில் சிறுபாண்மையினரின் உணர்வுகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தை அனுபவ ரீதியான உதாரணங்களுடன் உணர்த்தினார். அவர் அங்கு பேசுகையில்,

திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் பாராளுமன்றத்தில் எனக்குப் பக்கத்தில் சிலகலமாக அமர்ந்திருந்த காலத்தில் எனது இருகரங்களையும் பற்றிப்பிடித்து இப்படி சொன்னார்: 'அனுர, நான் ஒரு ஸ்றீ லங்கன் என்று சத்தம் போட்டு உலகத்திற்குச்

Read more...

Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும்

Read more...

Sunday, February 25, 2024

தீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்

அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.

தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன்

Read more...

Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப்

Read more...
Page 1 of 127712345678910111277Next
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com